நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Saturday, April 14, 2012

ஹாக்கி: இந்திய பெண்கள் "டிரா"

ஆக்லாந்து: இந்தியா, அமெரிக்க பெண்கள் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி "டிரா ஆனது.


நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் பெண்களுக்கான நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த போட்டியில் உலக "ரேங்கிங் பட்டியலில் 13வது இடத்தில் உள்ள இந்திய அணி, சற்று வலிமையான அமெரிக்காவை(10வது இடம்) சந்தித்தது. துவக்கத்தில் நமது வீராங்கனைகள் அசத்தினர். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தீபிகா ஒரு கோல் அடித்து, முன்னிலை பெற்று தந்தார். இதற்கு பின் கிடைத்த நான்கு "பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். 

ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் அமெரிக்காவின் கேட்டி ஓடோனல் ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என்ற கணக்கில் "டிரா ஆனது. 

இன்று நடக்க உள்ள போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

No comments:

Post a Comment