நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Thursday, April 19, 2012

செல்சி கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற இந்திய சிறுவர்களுக்கு வாய்ப்பு

செல்சி கால்பந்து அகாடமியில் சேருவதற்காக இந்தியாவில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 2ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் நடக்க உள்ளது.


உலக கோப்பை கால்பந்து போட்டி வருவதை முன்னிட்டு ஈ.எஸ்.பி.என். நிறுவனம் இந்தியாவின் 'சூப்பர் சாக்கர் ஸ்டார் இந்தியா' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்களில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு கால்பந்து அகாடமியில் மூன்று வார காலம் பயிற்சி அளிக்கப்படும். அதில் சிறந்த 4 பேர் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்தின் புகழ் பெற்ற செல்சி அணிக்கு சொந்தமான கால்பந்து அகாடமியில் பயிற்சிக்காக சேர்க்கப்படுவார்கள். பயிற்சியில் சிறப்பான ஒரு சிறுவன் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் 'சூப்பர் சாக்கர் ஸ்டார்' என்ற பட்டம் சூட்டப்படும். மேலும் அந்த சிறுவனுக்கு 10 ஆயிரம் டாலர்கள் பரிசும் காத்திருக்கிறது.

இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 2ந் தேதி புது டெல்லியிலும் கொச்சியில் 5ந் தேதியும் கோல்கத்தாவில் 8ந் தேதியும் கோவாவில் 11ந் தேதியும் காங்டாக்கில் 15ந் தேதியும் மும்பையில் 18ந் தேதியும் நடக்கிறது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் சிறுவர்கள் 13வயதில் இருந்து 16 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநில சிறுவர்கள் கொச்சியில் மே மாதம் 5ந் தேதி நடக்க உள்ள தேர்வில் கலந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ், போட்டியில் கலந்து கொள்வதற்காக பதிவு படிவம், வயது சான்று பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.தேர்வுக்கு வரும் சிறுவர்களுடன் ஒருவர் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்.

No comments:

Post a Comment