நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Monday, April 09, 2012

பெங்களூர் கால்பந்து வீரர் மைதானத்தில் மயங்கி விழுந்து சாவு


2004ல் இதே ஸ்டேடியத்தில் மரணம் அடைந்த கிறிஸ்டியானா (பைல் படம்
உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காததால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெங்களூர் கால்பந்து வீரர் மரணம் அடைந்தார்.
பெங்களூர் காண்டீவாரா ஸ்டேடியத்தில் 'ஏ'டிவிஷன் கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இந்த போட்டியில் பெங்களூர் மார்ஷ் அணி தென்மேற்கு ரெயில்வே அணியுடன் மோதியது.இந்த ஆட்டத்தின் போது 70வது நிமிடத்தில் பெங்களூர் மார்ஷ் அணியின் வீரர் வெங்கடேஷ் மைதானத்தில் மயங்கி விழுந்தார்.அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்த வண்ணம் இருந்தது.
ஆனால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க மைதானத்தில் எந்த மருத்துவ குழுவும் இல்லை.ஏன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை.இதையடுத்து ஒரு ஆட்டோவை கொண்டு வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதற்கு சுமார் 45 நிமிடம் பிடித்தது.ஆஸ்பத்திரியில் வெங்கடேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வெங்கடேசுக்கு 22 வயது மட்டுமே ஆகிறது.இந்த இளம் வீரரின் மரணம் பெங்களுர் கால்பந்து வீரர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெங்கடேஷின் மரணத்தையடுத்து சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் வாங்க கர்நாடக கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடாகவும் வழங்கியுள்ளது.
இதற்கு முன் கடந்த 2004ம் ஆண்டு பெங்களூர் காண்டீவாரா ஸ்டேடியத்தில் நடந்த பெடரேஷன் கோப்பை அரைஇறுதி போட்டியில் டெம்போ மற்றும் மோகன்பகான் அணிகள் மோதின.இந்த போட்டியில் டெம்போவின் கிறிஸ்டியானோ ஜுனியர் மைதானத்திலேயே மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment