நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Sunday, April 08, 2012

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2012





துபாய்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், இந்த ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், இந்த ஆண்டு கத்தாரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் தேதிகள் முடிவாகவில்லை என்றாலும், வரும் நவம்பர் - டிசம்பரில் தொடர் நடக்கும் என்று தெரிகிறது. போட்டிகள் இங்குள்ள அல்-ரேயான் மைதானத்தில் நடக்கும். இதில் 1500 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி தான் உள்ளது. இருப்பினும், தொடரின் போது கூடுதலாக தற்காலிக இருக்கைகள் அமைக்கப்படுகிறது.

கத்தார் ஹாக்கி கூட்டமைப்பு (கியூ.எச்.எப்.,) செயலர் முகமது நாசர் அப்துல் கூறுகையில், ""ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கு நடப்பது, கத்தாரில் ஹாக்கியை பிரபலப்படுத்த பெரிதும் உதவும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளின் போது மைதானம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

நடப்பு சாம்பியன் நம் இந்திய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தானை 4-2 என கோல் அடித்து கோப்பையை பெற்று நம் நாட்டிற்கு பெருமையை தேடி தந்தது. இம்முறையும் ஆசிய கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment