ஓடென்ஸ்:டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில், டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா, ஜப்பானின் மினட்சு மிடானியை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 21-14 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுரப் வர்மா, இந்தோனேசியாவின் சோனி டிவி குன்கோரோவிடம் 19-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
No comments:
Post a Comment