| பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 04 செப்ரெம்பர் 2012, 09:38.30 மு.ப GMT ] |
பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா கலந்து கொண்டார். இதில் கிரிஷா 1.74 மீற்றர் உயரத்தை தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பிஜி நாட்டு வீரர் லிசா டிலானா தங்கப்பதக்கத்தையும், போலாந்தின் லூகாஸ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெங்களூரை சேர்ந்த 24 வயதாகும் கிரிஷா, கடந்த 2008ம் ஆண்டு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, இடது காலில் செயற்கை உறுப்பு பொருத்தி உள்ளார். பெங்களூரில் செயல்பட்டு வரும் சமர்த்தனம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கிரிஷா, உயரம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
|
நாங்கள் இந்தியா...
Friday, October 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment